ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு: டேவிட் வார்னர் உள்பட சொந்த நாடு திரும்பிய 38 ஆஸ்திரேலிய வீரர்கள்..!!

Must read

டெல்லி: கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள், நடுவர்க,ள வர்ணனையாளர்கள் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் டேவிட் வார்னர் உள்பட   மொத்தம் 38 பேர் பத்திரமாக தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளனர்.

ஐபிஎல் 14 வது சீசன் தொடர் கடந்த ஏப்ரல் 9 ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் தொற்று பரவல் தீவிரம் காரணமாக, பல வீரர்கள் பாதிக்கப்பட்டனர். முதலில்,  கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ தேதி குறிப்பிடாமல் அறிவித்தது.

ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் அனைவரும், மாலத்தீவில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள்  விமானம் மூலம் தனது சொந்த நாட்டிற்க்கு திரும்பி சென்றுள்ளனர். அந்த வகையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் வார்னர், ஸ்மித், வர்ணனையாளர்கள் உட்பட  38 பேர் பத்திரமாக தனது சொந்த  நாடு திரும்பி உள்ளனர் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

 

More articles

Latest article