Skip to content
  • Mon. Jul 13th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா விளையாட்டு

ஐபிஎல்2020 டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகியது ‘விவோ’…

Aug 4, 2020
டெல்லி:ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீனா நிறுவனமான விகோ, விலகுவதாக அறிவித்து உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்  ஐபிஎல்-ன் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த  விவோ நிறுவனம், தற்போது இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, விலகுவதாக அறிவித்து உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, 5 ஆண்டு கால டைட்டில் ஸ்பான்சர் ஷிப்புக்காக ரூ .2,199 கோடியை செலுத்தி ஐபிஎல்நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போட்டது பிரபல மொபைல் போல் தயாரிப்பு நிறுவனமான விவோ.

ஆனால், சமீபத்தில் இந்தியா, சீனா துருப்புகளுக்கு இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதற்கிடை யில் மத்தியஅரசும் சீன செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. சீன நிறுவனங்களுடனான தொடர்புகளை துண்டித்து வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டில் ஐபிஎல் சீசன், கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த முடியாததால், ஐக்கியஅரபு நாடுகளில் நடத்துவதாக அறிவித்தது. இதனால், சீன நிறுவனமான விவோவின் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டன. விவோ டைட்டில் ஸ்பான்சராக இருப்பது குறித்துப் பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

ஆனால், பிசிசிஐ தரப்பில்,  ஐபிஎல் 2020 போட்டிக்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட  அனைத்து ஸ்பான்சர்களும் தக்கவைக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாக சபை விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்களைத்  தொடர்ந்து விவோ ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.

Post navigation

மகாத்மா காந்தி உருவப்படத்துடன் நாணயம் வெளியிட பிரிட்டிஷ் அரசு திட்டம்…
கொரோனா தொற்று நேரத்திலும் ராஜஸ்தானைப் படுத்தும் அமித்ஷா : சிவசேனா

Related Post

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer