லண்டன்:

காத்மா காந்தியடிகள் நினைவாகவும் அவரது சேவையை போற்றும் வகையிலும் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. .இது தொடர்பாக  ராயல் மின்ட் அட்வைசரி குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக்  கூறியுள்ளார்.

இது தொடர்பாக  ராயல்  மின்ட் அட்வைஸரி குழுவினருக்குகடிதம் எழுதி உள்ளதாகவும். அதில், கருப்பு காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும்பாடு பட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாகவும், ஆசிய சிறுபான்மையினத்தவரின் சாதனைகளை போற்றும் வகையில் ஒருவரின் நினைவு நாணயத்தை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியினர் சார்பில் அவர் வைத்த கோரிக்கைப்படி மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாணயத்தை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது. அக்டோபர் 2ந்தேதி மகாத்மாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், அதற்குள் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியானால், பிரிட்டிஷ் நாணயத்தின் முதல் வெள்ளை அல்லாத நபராக மகாத்மா காந்தி இடம்பெறுவார்.

சிறுபான்மை இன மக்கள் நாணயத்தில் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ‘வீ டூ பில்ட் பிரிட்டன்’ பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் முன்னாள் கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜெஹ்ரா ஜைடிக்கு எழுதிய கடிதத்தில் சுனக், “கருப்பு, ஆசிய மற்றும் பிற இன சிறுபான்மை சமூகங்கள் பிரிட்டனின் பகிரப்பட்ட வரலாற்றில் ஆழ்ந்த பங்களிப்பு கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்..

ராயல் புதினா ஆலோசனைக் குழு என்பது மாஸ்டர் ஆஃப் தி மிண்ட் என்ற வகையில் நிதியமைச்சருக்கு நாணயங்களின் வடிவமைப்புகளை பரிந்துரைக்கும் நிபுணர்களைக் கொண்ட ஒரு தன்னாட்சி பெற்ற குழுவாகும்.

மகாத்மா காந்தி உருவம் பொறித்த நாணயம் வெளியிடுவது தொடர்பாக  ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டியும் உறுதி செய்துள்ளது.  காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயத்தை வெளியிட (ஆர்எம்ஏசி) பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிடுவதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதை இந்திய தூதரகம் வரவேற்றுள்ளது.

சமத்துவம் மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக விளங்குபவர் மகாத்மா காந்தி. அவரது அகிம்சை கொள்கை இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

1869 இல் பிறந்த காந்தி, தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சைவழியினை கடைப்பிடித்தது மட்டுமல்லாமல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இதன் காரணமாக அவரது பிறந்த நாளான ஒக்டோபர் 2 ஆம் திகதி சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெரும்பாலும் இந்தியாவின் “தேசத்தின் தந்தை” என்று குறிப்பிடப்படும் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.