ஐபிஎல்: ஒரே நாளில் டபுள் ஹாட்ரிக்

Must read

பிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரண்டு ஹாட்ரிக் சாதனைகள் படைக்கப்பட்டது.
மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் சுழற் பந்துவீச்சாளர் சாமுவேல் பத்ரி (வெஸ்ட் இண்டீஸ்), பார்த்தீவ் பட்டேல், மெக்கலஹன், ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார்.

அடுத்து நடந்த புனே, குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், குஜராத் அணியின் ஆண்ட்ரூ டை (ஆஸ்திரேலியா) ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். கடைசி ஓவரில் பந்து வீசிய அவர், அங்கித் ஷர்மா, மனோஜ் திவாரி, தாகூர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

ஒரே நாளில் இரண்டு ஹாட்ரிக் சாதனை படைத்தது இதுதான் முதல் முறை. இந்த இரண்டு பேருக்கும் இந்தத் தொடரில் இதுதான் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article