பிஎல் கிரிக்கெட் 10 வது சீசனில் குஜராத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் புனே அணியை குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டார்.

முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் இளம் வீரர் ஆண்ட்ரூ டை அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் 17 ரன் மட்டுமே விட்டுத்தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். அடுத்து ஆடிய குஜராத் அணியில் பிரெண்டன் மெக்கல்லமும் டுவைன் ஸ்மித்தும் முறையே 49 மற்றும் 47 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் ஆரோன் ஃபிஞ்ச்சும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தனர். ரெய்னா 35 ரன்னும் ஃபிஞ்ச் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீ்ழ்த்திய ஆண்ட்ரூ டை ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.