ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தை (IPC) மாற்றியமைக்க உள்துறை அமைச்சகம் தயாராக உள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 1860ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தை மறுசீரமைப்பு செய்வது அவசியம் என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார், ஏனெனில் இது முதன்மையாக முதலாளி மற்றும் வேலைக்காரன் சிந்தனையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரிட்டிஷ் சகாப்தத்தில், காவல்துறையினர் அவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தயார் படுத்தப்பட்டனர். ஆனால் இப்போது அவர்களின் கடமை மக்களைப் பாதுகாப்பதாகும்” என்றார்.

சமீபத்தில், அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளைத் திருத்துவதற்கான பரிந்துரைகளைக் கோரி கடிதம் எழுதியது.

மாற்றியமைப்பின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், ஐபிசி-யில் திட்டமிடப்பட்டுள்ள முதலாளி-வேலைக்காரன் கருத்து மாற வேண்டும். மேலும், இச்சட்டம் வடிவமைக்கப்பட்ட பின்னர், ஒரு சில சேர்த்தல் மற்றும் நீக்குதல்கள் தவிர ஒருமுறைகூட ஒட்டுமொத்தமாகத் திருத்தப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

கடுமையான இயல்புடைய குற்றங்களுக்கு சீரற்ற தண்டனை இருப்பதாகவும், அதனால் தண்டனையை தரப்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

2016 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம், சட்டத்தில் இரண்டு கடுமையான இன எதிர்ப்பு பாகுபாடு விதிகளைச் சேர்க்க முன்மொழிந்தது. பிரிவு 153A மற்றும் பிரிவு 509A ஆகிய இரண்டு திருத்தங்களும் இனரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட குற்றங்களைக் கையாள்வதற்கானது. ஆனால், இதற்கு மாநிலங்களிலிருந்து சரியான பதில்களைப் பெற முடியவில்லை என்று கூறப்பட்டது.