டில்லி:

முன்னாள் மத்திய நிதி அமைச்சரின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான  கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது  விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது.  வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் கார்த்திக் சிதம்பரத்தின்  நிறுவனம் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுகுறித்து, அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தனித்தனியாக ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது புகார் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.