unnamed-4

அண்மையில் வெளியான படம்தான் ‘வென்று வருவான்’ ,ஆனால் படத்தைப் பார்த்த ஊடகங்கள் அதில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசையைப் குறிப்பிட்டிருந்தன. அப்படி அதற்கு இசையமைத்திருந்தவர்தான் அறிமுக இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்.

கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா அழைத்துக் கொண்டு விட்டது. இசையமைப்பாளர் ஆகி விட்டார்.இனி முரளிகிருஷ்ணனுடன்…!

உங்கள் முன் கதை?

எனக்கு சொந்த ஊர் சென்னைதான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே இங்கேதான். எனக்குள் சினிமா பாடல்கள் இசைபற்றிய ஆர்வம் சின்ன வயதிலிருந்தே தொடர்ந்து கொண்டு இருந்தது. கல்லூரி செல்லும்போது ஆடியோ கேசட் ரெக்கார்டு கடையில் பாடல்கள் கேட்டு கேட்டு பழக்கமாகி ரசனை வளர்ந்தது.பி.எஸ்ஸி மேத்ஸ் முடித்தேன்., இரண்டு எம்.பி.ஏ. முடித்தேன்.

unnamed-5

இசையை எங்கே கற்றுக் கொண்டீர்கள்?

எனக்கு சின்ன வயதிலிருந்தே இசையைக் கற்றுக் கொடுத்தவர் இளையராஜா சார்தான். அவர் பாடல்களையே சுவாசமாக்கி வளர்ந்தவன் நான். அவர் பாடல்களைக் கேட்டுக் கேட்டு ஒவ்வொரு பாடமாக கற்றேன். என் மானசீக குரு,முதல் குரு எல்லாமே அவர்தான். நான் நேரடியாக இசை கற்றது பலரிடம். கீபோர்டை டேனியல் மாஸ்டரிடம் கற்றேன். பாலா அவர்களிடமும் கற்றேன்.

இசையமைப்பாளர்கள் ‘மசாலாபடம்’ கார்த்திக் ஆக்சார்யா, பிரபல புரோகிராமர் ராஜேஷ், ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ஒரு நாள் கூத்து’ இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பக்திப் பாடல்கள் இசையமைப்பாளர் பாலா ஆகியோரிடம் அருகிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நட்புடன் ஏராளம் சொல்லிக்கொடுத்தார்கள்.பிரபல இசையமைப்பாளர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கவிராஜ், விஜய் ஆனந்த்ஆகியோர் சினிமா இசை நுணுக்கம் பற்றி நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள். ஐந்தாண்டுகள் இப்படி போனது.

சகட்டு மேனிக்கு நானே சூழல்களை அமைத்து பாடல்கள் வரிகள் எழுதி இசையமைத்து ‘டேமோ’ பாடல்கள் பதிவு செய்து வைப்பேன். இப்படி அமைத்த டெமோ பாடல்களைக் கேட்டுத்தான் முதல் படமான ‘வென்று வருவான்’ வாய்ப்பு வந்தது.

முதல் படஅனுபவம் பற்றி..?

என் முதல் படம் ‘வென்று வருவான்’ சிக்கனமாக எடுக்கப்பட்டு இருந்தாலும் அதற்காக லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பயன்படுத்தினோம்.

அது ஒரு கிராமியக்கதை. எண்பதுகள் போன்ற காலக்கட்டத்து இசைக்கு வாய்ப்புள்ள கதை. தூக்குமேடை கைதியின் கடைசி ஆசை தன்னை வளர்த்த தாயின் பாட்டைக் கேட்க வேண்டும் என்பதுதான் என தாயப்பாசம் சொல்லும் கதை..இப்படி இசைக்கு வாய்ப்புள்ள படம். ‘வென்று வருவான்’ வெளியான பிறகு வந்த விமர்சனங்களில் பல ஊடகங்கள் என்னை இளம் கண்டு எழுதியது பெரும் மகிழ்ச்சி.. அ து எனக்குப் பெரிய ஊக்கம் தந்தது.

இப்போது இசையமைக்கும் படம்?

நான் இசை என்று இறங்கியபிறகு தினந்தோறும் இசையமைக்கத் தவறுவதில்லை.வீட்டிலேயே ஒலிப்பதிவுக்கூடம் வைத்துள்ளேன்.வித விதமான சூழல்களுக்கான .நிறைய டெமோ பாடல்கள், டெமோ பின்னணி இசை என்று நூற்றுக் கணக்கில் உருவாக்கி வைத்திருக்கிறேன். இப்போது இசையமைத்துவரும் அடுத்த படம் ‘லவ்குரு’ இதில் கார்த்திக், பிரசன்னா, ஜானகி ஐயர், வேல்முருகன், அந்தோனி தாஸ் பாடியுள்ளனர்.

நல்ல வாய்ப்பு வந்தால் என்னை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிளது.காரணம் இசையமைப்பதை என் வேலையாக நினைக்கவில்லைல விருப்பமாக நினைக்கிறேன்..

நம்பிக்கையுடன் கூறுகிறார் முரளிகிருஷ்ணன். நன்னம்பிக்கை என்றும் பொய்ப்பதில்லை..முரளிகிருஷ்ணனை வாழ்த்தலாம்.!