டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசா கடற்கரையில், பிரதமர் மோடி சூரிய சமஸ்காரம் செய்யும் வகையில் மணல் சிற்பத்தால் யோகா தினத்தை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த பண்டைய நடைமுறையை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதே சர்வதேச யோகா தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையொட்டி இந்தியாவில் குடியரசு தலைவர் முர்பு, பிரதமர் மோடி முதல் சாமானிய மனிதர்கள் மற்றும் முப்படையினர் என அனைவரும் , சாதி மத வேறுபாடின்றி இன்று யோகா செய்து, உலக யோகா தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு நாடுகளிலும் யோகா தினம் அந்நாட்டு அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உலக யோகா தினத்தை முன்னிட்டீ, ஒடிசா கடற்கரையில் பிரபல மணல் சிற்ப கலைஞர், சுதர்சன் பட்நாயக் யோகா தொடர்பான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார். ஒடிசாவின் பூரி கடற்கரையில் உலக யோகா தினத்தை முன்னிலைப்படுத்தி, அதனுள் பிரதமர் மோடி யோகா மூலம் சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற ஒரு சிற்பத்தையும் உருவாக்கி, Yoga for One Nation One Health என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.