சென்னை: டிசம்பர் 3ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கான விருதுகளை வழங்கியதுடன், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
சர்வதேச மாற்றுத்திறநாளிகள் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறை உருவாக்கி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழநாடு முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசு தலைவரால் இன்று விருது வழங்கப்பட உள்ளது.
இச்சமுதாய முன்னேற்றத்தற்கு, மாற்றுதிறநபாளிகள் உதவ நாம் வாய்ப்பு வழங்குவோம், அவர்களின் வாழ்க்கை வளமாக்குவோம் என்று தெரி வித்து உள்ளார்.
தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான விருதுகளை வழங்கி பல்வேறு திட்டங்களை வைத்தார்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின், மறுவாழ்வுக்காக 1972 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று , மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் அரசு மறுவாழ்வு இல்லம் தொடங்கப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் அரசு மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவு , உறைவிடம், உடை, மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. தையல் மற்றும் காலணி தயாரிப்பு போன்ற பல்வேறு தொழிற்பயிற்சி அளிக்கப்படுவதுடன் அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஏற்ப ஊதியமும் வழங்கப்படுகிறது.
அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவை புரிந்ததற்காக சிறந்த சமூக பணியாளர் விருதினை செல்வி ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன் அவர்களுக்கும் , சிறந்த நிறுவனத்திற்கான விருதினை, விருதுநகர் மாவட்டம் சப்தகிரி அறக்கட்டளைக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிப்பதற்காக திருமதி ஜெயந்தி அவர்களுக்கும் , பார்வை குறைபாடு உடையவர்களுக்கு கற்பிப்பதற்காக மாரியம்மாள் அவர்களுக்கும் வழங்கினார். அத்துடன் இந்நிகழ்ச்சியில் மேலும் பலருக்கு விருது வழங்கி, முதலமைச்சர் பாராட்டினார்.
இந்த விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் ஏ.வ.வேலு உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.