சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் காணப்படுகின்றனர், இது மிகுந்த வேதனையாக காணப்படுகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் எந்த ஒரு இலவச சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக காணப்படுகிறது என்று கருத்தினை தெரிவித்து இருந்தனர்.

இதனால் லஞ்சம் வாங்குபவர்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் நூதனமாக நோட்டமிட்டு அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்குகின்றனர். அந்த வகையில் தற்போது நுங்கம்பாக்கம் ஆய்வாளர் காணப்படுகிறார்.

ஏனென்றால் சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நகைக்கடை திருட்டு வழக்கில் ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சம் கேட்டு விவகாரத்தில் ரோகினி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் கேட்ட விவகாரத்தில் காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆய்வாளர் ரோகிணியை காத்திருப்பர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.