சென்னை:  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சட்ட விதிகளை மீறி கட்டப்பட்ட 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chennai Corporation bans 2665 construction works
built in violation of rules!

மாநில தலைநகர் சென்னையில், அரசு அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களும், அரசு அனுமதி பெற்றும், கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள  அறிவிப்பில், “சென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியுள்ள 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளில் விதிமீறல்களை சரிசெய்யவில்லை எனில் 2403 கட்டுமான இடங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.