இஸ்ரோ:
வானிலை ஆய்வுக்கான இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை ஏவி வருகிறது.
13rockert
இன்று ஏவப்பட்ட இன்சார் 3டிஆர் செயற்கை கோள்  தகவல் தொழில்நுட்பம், வானிலை ஆராய்ச்சி உள்பட பல்வேறு துறைகளுக்கான செயற்கைக்கோள்களை  ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ அனுப்பும் 10வது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது விண்வெளி  ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்றே ஆரம்பமானது.
இன்சாட்-3 டிஆர் செயற்கைக்கோளின்  எடை 2,211 கிலோ. இந்த செயற்கைக்கோள் மூலம் வானிலை தொடர்பான தகவல்கள், கடல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், ராணுவத்திற்கு  தேவையான தகவல்கள் உள்ளிட்டவற்றை பெற முடியும்.

இந்திய பெருங்கடல் முழுவதும்  இந்தியா, வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை, தான்சான்யா  உள்ளிட்ட நாடுகளின் பருவநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்களையும் பெற  முடியும்.
பூமியில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைக்கோள்  நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  இந்த செயற்கைகோளில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
இன்று மாலை 4.50 மணிக்கு  ஜிஎஸ்எல்வி-எப் 05 ராக்கெட்  வெற்றிகரமாக விண்ணில்  பாய்ந்தது. இதை பார்த்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொண்டனடர்.
ராக்கெட்டின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.