ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

Must read

டில்லி:

நாடு முழுவதும் ஒரே விதிப்பை கொண்டு வரும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்பதல் அளித்தார். இதன் வாயிலாக சட்டம் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும்  க ஒரே சீரான வரிவிதிப்பை முறைப்படுத்தும்  வகையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி.) கடந்த 2014–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு இடையூறுகளை கடந்து வந்த இந்த மசோதாவுக்கு தற்போது ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.
1gst1a-pranab1
பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு மே 6–ந்தேதி நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மேல்சபையில் நிறைவேற்ற முடியாமல் முடங்கியது. மசோதாவில் கூறப்பட்டு இருந்த 1 சதவீத கூடுதல் வரியை திரும்ப பெறுதல் உள்ளிட்ட சில திருத்தங்களை மேற்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் கூறிய திருத்தங்களில் பெரும்பாலானவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இந்த திருத்தியமைக்கப்பட்ட மசோதா பாராளுமனற் மேல்சபையில் கடந்த மாதம் 3–ந்தேதி நிறைவேறியது. பின்னர் பாராளுமன்றத்திலும் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
ஒரு அரசியல் சாசன மசோதா திருத்தப்பட் வேண்டுமென்றால் அதற்கு 50 சதவித மாநிலங்களில் உள்ள சட்டசபையில் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.  அதையடுத்து ஜிஎஸ்டி மசோதாவும் மாநிலங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த  மசோதாவுக்கு பாரதியஜனதா ஆளும்  அசாம் சட்டசபை முதன்முதலில் ஒப்புதல் வழங்கியது. அதைத்தொடர்ந்து பல மாநிலங்கள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தன. மொத்தம் 17 மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனத. இதையடுத்து  இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று  ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்த மசோதா தற்போது சட்டமாகி உள்ளது.
இந்த  ஜி.எஸ்.டி. சட்டத்தால் மதிப்பு கூட்டுவரி (வாட்), கலால்வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, கூடுதல் சுங்கவரி, சிறப்பு கூடுதல் சுங்கவரி போன்ற வரிகள் அனைத்தும் ஒரே வரியின் கீழ் கொண்டு வரப்படும். இதை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சேவை வரி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, வரிவிகிதம், கூடுதல் கட்டணம் உள்ளிட்டவற்றை முடிவு செய்வதற்கான ஜி.எஸ்.டி. கவுன்சிலை உருவாக்க மத்திய அரசுக்கு வழி ஏற்பட்டு உள்ளது.
மத்திய நிதி மந்திரி தலைமையிலான இந்த குழுவில், மாநில நிதி மந்திரிகள் இடம் பெறுகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள மத்திய அரசு இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும்த என தெரிகிறது.
 

More articles

Latest article