இன்போசிஸ் அலுவலத்தில் பெண் ஊழியர் கொலை! காவலாளி கைது!

Must read

 

புனே:

புனே நகரில், இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர், நிறுவன வளாகத்தில் கொலை செய்யப்பட்டது மகராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.டி. தொழில் பிரிவில் புகழ் பெற்ற இன்போஸிஸ் நிறுவனத்தின் கிளை மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரிலும் செயல்படுகிறது. இங்கு  ரசிலா ராஜூ என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இவர் அலுவலக வளாகத்தில் நேற்றுமாலை கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள், அதே நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் பாபென் சைக்கியா என்ற அஸ்ஸாம் வாலிபர் மீது சந்தேகம் கொண்டனர்.

தப்பி ஓடிய அவரை இன்றுகாலை மும்பையில் வைத்துப் பிடித்ததாக, மூத்த காவல் துறை ஆய்வாளர் அருண்வைக்கர் தெரிவித்தார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article