திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு பகுதி மலைவாழ் மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலைவாழ் மக்களுக்காக முதல் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவை புதூர் நாடு மலைப்பகுதியில் துவக்கப்பட்டது.

இந்தியாவிலே முதன்முறையாக மலைவாழ் மக்களின் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க பிரத்தியேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு கட்டிடத்தை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற பிறகு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் மலைவாழ் மக்களின் நலன் அறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்.

அதில் ஒரு பகுதியாக இந்த மிக எதிர்பாராத திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மாவட்ட ஒன்றிய குழு தலைவர் எம்.கே சூரியகுமார் மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவு மாநில முதன்மை அலுவலர் சீனிவாசன், திருப்பத்தூர் மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து.. மற்றும் மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்..