இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

Must read

காஷ்மீர்:
ந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதி நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து காஷ்மீர், குஜராத், பஞ்சாப் ஆகிய எல்லையோர பகுதிகளில் தீவிர உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
border
பாகிஸ்தான் மீதான தாக்குதலை தொடர்ந்து இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் போர் ஏற்படலாம் என்கிற நிலை நீடித்து வருகிறது.  போர் ஏற்பட்டால் அப்பகுதிகளில் விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடக்கும். இதனால் அப்பகுதியில் வாழும் இந்திய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் எல்லைப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார்  15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.
போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவமனைகள்,ஆம்புலன்ஸ் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு ஹெலிகாப்டர் மற்றும் விமானம் கூட பயன்படுத்தப்படுவதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.
1poor
எல்லைப்பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையினர்,ராணுவம், அதிரடிப்படையினர்,கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடல் எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் கப்பற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து காஷ்மீர், குஜராத், பஞ்சாப் ஆகிய எல்லையோர பகுதிகளில் தீவிர உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பஞ்சாபில் எல்லையோரங்களில் அமைந்துள்ள 6 மாவட்டங்களில் சுமார் ஆயிரம் கிராமங்களில் இருந்து ஏறத்தாழ 15 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
2poor
இதனால் எல்லையில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவே உள்ள அமிர்தசரஸ், தர்ன் தரன், குருதாஸ்பூர், பதன்கோட், பசில்கா, பெரோஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியேறிய மக்களுக்கு தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், அதிரடி தாக்குதல் தகவலை அறிந்த பிறகு வியாழன் காலை முதல் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை தொடங்கியுள்ளோம். பதிலடி தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக உள்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததால், மாநில பேரிடர் மேலாண்மை படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அங்கு வெளியேறிய மக்களை ராணுவத்தினரும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தப் போவதாக இது வரை எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
இருந்த போதிலும் எல்லையோர கிராம மக்களை எச்சரிக்கை செய்துள்ளோம் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
வெளியேற்றம் குறித்து பஞ்சாப்  முதல்வர் பாதல் மேலும் கூறுகையில்,
பொது மக்களுக்கு நாங்கள் இரண்டு வாய்ப்பு கொடுத்துள்ளோம். விரும்புபவர்கள் மாநிலத்தின் வேறு பகுதியில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு சென்று விடலாம். அல்லது முகாம்களில் தங்கியிருப்பதாக இருந்தாலும் இருக்கலாம்.
மக்கள் வெளியேறிய கிராமங்களில் உடைமைகளுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிப்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல் மருத்துவ ஊழியர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டு அவசரமாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பா தல் தெரிவித்தார். இதனால் பஞ்சாபில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது –
இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும், தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் இந்திய உளவுத்துறைக்கு உறுதியான தகவல்கள் கிடைத்தன.
இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்புக்காக  ராணுவ வீரர்கள் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article