காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்!

Must read

டெல்லி:
டுத்த  3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.. அப்போது, காவிரி விவகாரத்தில்  இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர் உமா பாரதி நடத்திய பேச்சுவார்த்தை குறித்த அறிக்கை  இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதை படித்துபார்த்த நீதிபதிகள்,  வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை, கடந்த 20ம் தேதி,விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 21 முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 30ம் தேதி (இன்று) வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது. இதை கர்நாடகா ஏற்கவில்லை. சட்டசபையை கூட்டி, தண்ணீர் விடமாட்டோம் என தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதனால் கடுப்பான  சுப்ரீம்கோர்ட் கடந்த விசாரணையின்போதே கர்நாடக அரசை கடுமையாக கண்டித்தது. ஆனாலும், கர்நாடக அரசு தனது பிடிவாதத்தை விடாமலும், உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காமலும் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை வந்தது. அப்போது கர்நாடகாவை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர், தமிழகத்துக்கு அக்டோபர் 6-ந் தேதி வரை நீரை திறந்துவிட உத்தரவிட்டனர். இந்த உத்தரவுதான் இறுதியானது… இதனை கர்நாடகா அரசு அமல்படுத்தியாக வேண்டும் என்று கண்டிப்புடன் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடைசி வாய்பு அத்துடன் நீங்கள் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றத்துக்குத் தெரியும்….இருந்தாலும் உங்களுக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
 

More articles

Latest article