மறைமுக பேச்சுவார்த்தை: தேர்தல் கூட்டணி குறித்து கமல் தகவல்

Must read

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி பேச்சு வார்த்தை  மறைமுகமாக நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித் துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தைகளை தொடங்கி உள்ளன. முக்கிய கட்சிகளாக திமுக, அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனிடம் தேர்தல் கூட்டணி குறித்து கேள்விகளை தொடுத்தனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய கமல்ஹாசன்,  மக்கள் நீதி மய்யத்துடன் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதுதொடர்பான அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கூட்டணியை  பொருத்தவாரை நல்ல நண்பர்கள் அமைவது முக்கியம், எப்படி யாவது நண்பர் அமைய வேண்டும் என்பது முக்கியம் இல்லை என்று கூறியவர்,  மெகா கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்தும் செயல் படலாம், தனித்து இருந்தும் செயல்படலாம் என்று  எப்போதும் போல குழப்பினார்.

More articles

Latest article