டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி,  டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள்  சோனியா காந்தி, ராகுல் காந்தி  உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்.

இருப்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, 1984 அக்டோபர் 31ஆம் தேதி, தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் ஆகிய சீக்கிய மதக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவுதினம் ஆண்டுதோறும்  அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது.

இன்று அவரது நினைவுநாளையொட்டி, டெல்லி உள்ள சக்தி ஸ்தலத்தில் உள்ள நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, அக்கட்சி எம்பி ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.