புது டெல்லி:
ந்திய ஒற்றுமை நடைப்பயணம் பயம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அரியானாவில் ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது,

பாரதத்தை இணைப்போம் நடைப்பயணம் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஒற்றுமை பயணத்தின் மூலம் நாட்டு மக்களின் பிரச்னைகள் கேட்டறியப்பட்டு வருகிறது. நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒற்றுமைப் பயணத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவினுடைய குரல் ஒடுக்கப்படுகிறது. நாட்டில் உள்ள மக்களிடம் அச்ச உணர்வு பரப்பப்படுகிறது. ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மற்ற மதங்களின் மீது வெறுப்பை காட்ட வழிவகை செய்யப்படுகிறது. மக்களிடம் வெறுப்புணர்வு பரப்பப்பட்டு அவர்களிடம் பிரிவினைவாதம் பரப்பப்படுகிறது.

அதற்கு எதிரானதுதான் இந்த ஒற்றுமை யாத்திரை. நாங்கள் இந்த நாட்டினை நேசிக்கிறோம். இந்த நாட்டிலுள்ள மக்கள், விவசாயிகள், ஏழை மக்கள் அனைவரையும் நேசிக்கிறோம். அவர்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறோம். நாட்டின் உண்மையான குரலை மக்களுக்கு எடுத்துச் செல்வதே இந்த ஒற்றுமைப் பயணத்தின் நோக்கம் என்று கூறினார்.