சண்டிகர்: ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று 116வது நாளை எட்டி உள்ளது. இன்று மாலை அரியானா எல்லையில் தங்கும் ராகுல்காந்தி, முன்னதாக இன்று பிற்பகல் அமிர்தசரஸ்-ல் உள்ள  பொற்கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். நாளை காலை பஞ்சாப் மாநிலத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், பிரிவவினை வாதத்தை ஊக்குவிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் எம்.பி.  ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது 115 நாட்களை இன்று 116வது நாளாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தொடங்கி பல்வேறு மாநிலங்களை கடந்து இந்தப் பேரணி இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,டிசம்பர் இறுதியில் டெல்லி வந்தடைந்தது. அங்கு கிறிஸ்துமஸ் புத்தாண்டை ஒட்டி பாதயாத்திரைக்கு ஒரு வாரம் ஒய்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியை தொடர்ந்து, உ.பி. வழியாக  கடந்த வாரம் அரியானாவின் பானிபட்டில் நுழைந்தது, பின்னர் அது அம்பாலா மாவட்டத்தில் முடிவதற்கு முன்பு கர்னால் மற்றும் குருஷேத்ரா மாவட்டங்கள் வழியாகவும் சென்றது.

இன்று அரியானாவில் இருந்து தொடங்கிய யாத்திரையின் போது,  ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் உடன் இருந்தனர். ஹரியானா வழியாக சென்ற பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஹரியானாவில் டிசம்பர் 21 முதல் 23 வரை நூஹ், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் மாவட்டங்கள் வழியாக யாத்திரை 130 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்தது.

இன்று காலை, அம்பாலா கண்டத்தில் உள்ள ஷாபூரிலிருந்து ராகுல் காந்தி பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினார். இந்த யாத்திரை இன்று இரவு அரியானா  பஞ்சாப் எல்லை பகுதியான,  ஃபதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்தின் நியூ அனாஜ் மண்டிக்கு வருகிறது.  அங்கு இரவு  ஓய்வுக்கு பிறகு,  நாளை (புதன்கிழம)  காலை அங்கிருந்து  ராகுலின் யாத்திரைபஞ்சாப்புக்குள் கால் வைக்கிறது.

முன்னதாக இன்று பிற்பகல் யாத்திரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  பஞ்சாபில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைத் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உறுதி செய்யப்பட்டும் உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், 116-வது நாள் ஒற்றுமை நடைப்பயணம் அரியானாவின் அம்பாலாவில் நிறைவு செய்துள்ளது.  நாளை காலை பஞ்சாபில் கால் பதிக்க உள்ளோம் என்றார். அமிர்தசரஸில் உள்ள புனிதமான பொற்கோயிலுக்கு நடைப்பயணம் செய்வதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது.  ராகுல் காந்தி அங்கு மரியாதை செலுத்துகிறார். அதனால்  இன்று பிற்பகல் நடைப்பயணம் இருக்காது என்று அவர்  டிவீட் செய்துள்ளார்

செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும், ஜம்மு-காஷ்மீர் கோடைகால தலைநகரில் காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.