Skip to content
  • Sun. Sep 27th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

பலி 884: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது…

Apr 27, 2020

டெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 884 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம்,தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேவேளையில் கொரோனாவில் இருந்து குணமாகி விடுதலைபெறுவோர் எண்ணிக்கையும் 50 சதவிகிதத்தற்கு மேல் அதிகரித்து உள்ளது.  இதன் காரணமாக  வைரஸ் பரவுவதில் அதிவேகம் இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்து 28ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 27, 977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை எ 6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 342 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 3301 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 2918 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் மேலும் ஐந்து பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. அதில் 35 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொற்றுநோயால் புவனேஸ்வரைச் சேர்ந்த 72 வயது நபர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post navigation

குணமான கொரோனா நோயாளிகள்.. வியப்பான வாக்குமூலங்கள்…
ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,280 பேர் கைது… ரூ.3.33 கோடி அபராதம்…

Related Post

இந்தியா

SIR சர்ச்சைக்கு மத்தியில் புதிய நடைமுறை! பெயர் விடுபட்டவர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய வாய்ப்பு!

இந்தியா

மனைவி கொலை வழக்கு… 15 ஆண்டுகள் தலைமறைவு! 23 ஆண்டுகளாகியும் தீர்ப்பு இல்லை!

இந்தியா

திருமணம் முடிந்தது… மாமியார் வீடு செல்ல முடியவில்லை! ஹரியானா கேங்ஸ்டருக்கு 12 மணி நேர ‘பரோல் கல்யாணம்’!

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

மெல்ல மெல்ல மங்கும் வாயேஜர்-1… உயிரைக் காக்க ஒரு அறிவியல் கருவி நிறுத்தம்…

September 26, 2026 Sundar
உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer