பெய்ஜிங்:

எல்லையில் இந்தியாவின் ஆத்திரமூட்டும் செயல்களால் இரு நாடுகளின் பரஸ்பர நம்பிக்கை மற்றும் இரு தரப்பு உறவுகளுக்கான அடித்தளத்தை அழிக்கும் என்று சீனா பகுத்தாய்நர் சாவோ கெங்சங் என்பவர் தெரிவித்துள்ளார்.

இமயமலை சரகம் சினோ&இந்திய எல்லையில் ரோந்து படைகள் அதிகரிக்கப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் டோக்லாமை போல் இந்தியா&சீனா&மியான்மர் என 3 நாடுகளின் எல்லை சந்திக்கும் பகுதியான இங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்திய ராணுவம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்தே ஷாங்காய் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்ஸின் ஆசியா பசிபிக் ஸ்டடிஸ் மைய இயக்குனரான சாவோ கெங்சிங் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் கூறுகையில்,‘‘எல்லைப் பகுதியில் அமைதி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான் இந்தியா படைகளை குவித்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘3 நாடுகளின் எல்லை பகுதிக்குள் சீனாவின் படைகள் நுழையவில்லை. ஆனால் இந்த பகுதிக்கு அருகில் சாலை வசதியை சீனா ஏற்படுத்தி வருகிறது. இது ராணுவத்தை ஒருங்கிணைக்க பயன்படக் கூடியதாகும்.