ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மனைவி வின்னி மண்டேலா (வயது 81) இன்று காலமானார்.

இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுடன் வின்னி கலந்துகொண்டார்.

இனவெறி போராட்டத்துக்காக வின்னி பல முறை சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.