மும்பை

ண்டிகைக்கால விற்பனையை முன்னிட்டு இந்தியாவின் செப்டம்பர் மாத தங்க இறக்குமதி 31% அதிகரித்துள்ளது.

உலகின் தங்க விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு இந்தியா ஆகும். தெற்காசிய நாடுகளில் தங்க இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  இவைகளில் பெரும்பாலானவை ஆபரணமாக விற்கப்படுகிறது.

இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 48 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  இது சென்ற வருட செப்டம்பர் மாத இறக்குமதியை விட 31% அதிகம் ஆகும்.  இதற்கு காரணமாக இந்த வருடம் செப்டம்பர் இறுதியில் தசரா பண்டிகை வந்ததும்  அக்டோபரில் தீபாவளிப் பண்டிகை வர உள்ளதுமே காரணம் என சொல்லப்படுகிறது.

தசரா பண்டிகையின் போது தங்க நகை வாங்குபவர்கள் தங்களின் பான் எண்ணை அளிக்க வேண்டும் என இருந்த சட்டம் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  இதனால் தீபாவளி சமயத்தில் மேலும் அதிக நகைகள் விற்கப்படும் என நகைக்கடை அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   இதனால் அக்டோபர் மாதத்திலும் தங்க இறக்குமதி அதிகரிக்கும் என தங்க வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.