இமாசலப் பிரதேச தேர்தல் : வாக்களிக்கப்  போகும் 100 வயதான முதல் இந்திய வாக்காளர்!

Must read

சிம்லா

ந்தியாவின் முதல் வாக்காளருக்கு வாக்களிக்க வசதியான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தர உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1950ல் குடியரசு நாடாகியதும் முதல் தேர்தல் இமாசலப் பிரதேசத்தில் நடந்தது.   அந்த தேர்தலில் முதல் இந்திய வாக்காளரான சியாம் சரன் நேகி வாக்களித்தார்.   அந்த தேர்தல் 1951ஆம் வருடம் அக்டோபர் 25ஆம் தேதி நடந்தது.  அப்போது அரசுப் பள்ளி ஆசிரியராக பணி புரிந்த நேகி 1975ஆம் வருடம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.  நேகி நாட்டின் முதல் தேர்தலில் இருந்து இன்றுவரை தொடர்ந்து வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இமாசலப் பிரதேசத்தில் நடை பெற உள்ள தேர்தலிலும் நேகி வாக்களிக்க உள்ளார்.  100 வயதாகும் அவர் தற்போது நடக்கவே மிகவும் சிரமப்படுகிறார்.  எனவே அவருக்கு வாக்களிக்க வசதியான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய திட்டமிட்டுள்ளது.    கடந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கூகுள் எடுத்த ஆவணப்படத்தில் நேகி தோன்றி வாக்களிக்கும் அவசியத்தை எடுத்துரைத்திருந்தார்.   அந்த ஆவணப் படத்தில் தான் முதலில் வாக்களித்த அனுபவத்தை கூறி இருந்தார்.

நேகியின் மருமகள் சுர்மா தேவி, “எனது மாமா இன்று வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை.   குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிப்பது நமது நாட்டுக்கு  நாம் செய்யும் கடமை எனக் கூறுவார்.  இந்த தொகுதியில் அனைவருக்கும் பழக்கமானவர் அவர்” எனக் கூறி உள்ளார்.

More articles

Latest article