இருப்பதோ 5 விக்கெட்டுகள் மட்டுமே – ரன்அவுட்டை தவிர்ப்பார்களா இந்திய வீரர்கள்?

Must read

சிட்னி: இந்திய அணி தற்போது கடும் நெருக்கடியில் ஆடி வருகிறது. எனவே, 5 விக்கெட்டுகள் கையில் எஞ்சியுள்ள நிலையில், யாரும் ரன்அவுட் ஆகக்கூடாது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு காரணம், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஆடிய லட்சணம்தான். அந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் 3 வீரர்கள் தேவையில்லாமல் ரன்அவுட் ஆனார்கள்.

இது, இந்திய அணியை பெரியளவில் பாதித்தது. இந்திய கணக்கில் இன்னும் கூடுதலாக 50 ரன்களாகவது ஏறுவதை இது தடுத்தது. இதனால், பெரியளவில் ரன் பின்னடைவை சந்தித்தது இந்திய அணி.

தற்போது, சிட்னி டெஸ்ட்டில், வெற்றி அல்லது டிரா என்ற கட்டாயத்தில் ஆடி வருகிறது இந்திய அணி. எனவே, வீரர்கள் யாரும் ரன்அவுட் ஆகக்கூடாது என்ற நிலை உள்ளது. இதை இந்திய வீரர்கள் உணர்ந்து ஆட வ‍ேண்டியது அவசியம்.

 

More articles

Latest article