பிரிஸ்பேனில் 4வது டெஸ்ட் சந்தேகம் – சிட்னியில் இந்தியாவுக்கு வெற்றி (அ) டிரா கட்டாயம்!

Must read

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் திட்டமிடப்பட்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி, கொரோனா பரவல் காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சிட்னி டெஸ்ட்டை வெல்ல வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-1 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன. தற்போது, சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், வெற்றிக்காக கடுமையாகப் போராடி வருகிறது இந்திய அணி. இந்தப் போட்டியில் வென்றால், இந்திய அணி தொடரை மீண்டும் வெல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அதேசமயம், குறைந்தபட்சம் டிரா செய்தால்கூட, டெஸ்ட் தொடரையே சமன் செய்து மானத்தைக் காப்பற்றலாம். ஒருவேளை தோற்றுவிட்டால், டெஸ்ட் போட்டியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தப் போட்டியில், இந்திய அணியில் பல வீரர்கள் திடீரென காயமடைந்தது, அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஜடேஜாவின் காயம் இந்திய அணியைப் பெரியளவில் பாதித்துவிட்டது.

 

More articles

Latest article