புதுடெல்லி: இந்தியாவின் மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த நுட்லாய் லால்பியாகிமா என்ற 22 வயது இளைஞர், குத்துச்சண்டைப் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

இவரால் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் போன்று புகழ்பெற இயலவில்லை என்ற போதிலும், அவரின் இந்த சாதனை ஒட்டுமொத்த உலகிலும் கவனம் பெறும் என்பது நிச்சயம்.

மிஸோரம் மாநிலத்தில் சியாஹா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர், 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தியுள்ளார்.

கசகஸ்தான் நாட்டில் நடந்துவரும் பிரெசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தி, 49 கிலோ எடைப் பிரிவினருக்கான அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவரின் தந்தை ஒரு நோயாளியாக இருக்கும் நிலையில், அவரின் தயார் சந்தையின் மீன் விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். கடந்த 2009ம் ஆண்டில் இவர் முதன்முதலாக குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்டார்.