டில்லி

ந்திய கிரிக்கெட் அணி  சீருடையின் விளம்பரதாரர் ஒப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் மாற்றப்பட உள்ளது.

சீனாவின் புகழ்பெற்ற மொபைல் நிறுவனமான ஒப்போ கடந்த 2017 முதல் இந்திய கிரிக்கெட் அணி சீருடையின் விளம்பரதாரராக இருந்து வருகிறது.   இந்த நிறுவனம் அணியின் விளம்பரதாரராகவும் ஐந்து வருடம் ஒப்பந்தத்தில் உள்ளது.   இதற்காக ஒப்போ நிறுவனம் போட்ட 768 கோடி ரூபாய் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே ஒப்போ நிறுவனம் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

இதனால் வரும் மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணம் வரை இந்திய கிரிக்கெட் அணி ஒப்போவின் சீருடையை அணிந்து விளையாட உள்ளது.    இந்திய அணி சீருடைக்கு புதிய விளம்பரதாரராகக் கல்விச் செயலி நிறுவனமான  பைஜுஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது  இந்த  நிறுவனம் பைஜு ரவிச்சந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.

ஒப்போ நிறுவனம் தனது ஒப்பந்தத்தை பைஜு நிறுவனத்துக்கு விட்டுக்  கொடுத்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன.   ஒப்போ அளிக்கும் அதே விளம்பரக் கட்டணத்தை பைஜு அளிக்கும் என்பதால்  இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எவ்வித இழப்பும் இருக்காது என கூறப்படுகிறது.