கணவர்கள் மனைவிகளை அடிப்பதாகத்தான் இதுவரை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அடி உதைக்கு ஆண் பெண் வித்தியாசமில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஐ.நா சமீபத்தில் குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறைகள் குறித்து எடுத்த கணக்கெடுப்பில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. எகிப்தியப் பெண்கள்தான் கணவரைப் பந்தாடுவதில் முதலிடத்தில் இருக்கின்றனர். பிரிட்டன் பெண்கள் இரண்டாவது இடத்திலும், இந்தியப் பெண்கள் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பல ஆண்கள் வீட்டுல எலி வெளில புலி போல மனைவியிடம் அடிவாங்கிக் கொண்டு அதை வெளிக்காட்டாமல் வடிவேலு போல கித்தாப்பாக வெளியே வலம்வருவது இதன்மூலம் தெரியவருகிறது.