9 பறவைகள் சாவு: டெல்லியில் பறவை காய்ச்சல்! உயிரியல் பூங்கா மூடப்பட்டது

Must read

டில்லி,
யிரியல் பூங்காவில் உள்ள பறவைகளில்  9 பறவைகள் இறந்ததையடுத்து  உயிரியல் பூங்கா உடனடியாக மூடப்பட்டது.
delhi_zoo
டில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் சில பறவைகள் இறந்து கிடந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் பூங்கா முழுவதும் தேடியதில் 9 பறவைகள்  இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த பறவைகள் உடடினயாக உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில், பறவைகள் அனைத்தும் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.
இதன் காரணமாக, பறவை காய்ச்சல் பூங்காவில் உள்ள மற்ற பறவைகளுக்கும்  பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கும் காய்ச்சல் பரவக்கூடும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
delhi-zoo2
இதைத்தொடர்ந்து  பறவை காய்ச்சல் பரவாமல் இருக்கவும், பறவை காய்ச்சல்  வைரசை கட்டுப்படுத்தும் பணிகளும் தொடங்கி உள்ளன.  பூங்கா முழுவதும் மற்றும் அதை சுற்றியும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி வளர்ச்சி மற்றும் பொது நிர்வாகத்துறை அமைச்சர் கோபால் ராய்  பூங்காவிற்கு சென்று மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார்.

More articles

Latest article