காத்மண்டு

சீனா மற்றும் இத்தாலி வைரஸை விட இந்தியாவின் வழியாகப் பரவும் அதிக அபாயமுள்ள வைரசால் நேபாளத்தில் கொரோனா பரவுவதாக அந்நாட்டு பிரதமர் கூறி உள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்திய நடவடிக்கைகளுக்கு நேபாளம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது  சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் திபெத் பகுதியின் மானசோரோவருக்கு செல்ல எல்லையோர சாலையை இந்தியா அமைப்பதற்கு சீனா கடும் கோபம் அடைந்தது.   அதைத் தொடர்ந்து நேபாளமும் திடீரென அதை எதிர்க்கத் தொடங்கியது.

அடுத்ததாக இந்தியாவின் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள லிம்பியாதுரா, காலாபானி, மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளம் தங்கள் நாட்டுடன் இணைத்து ஒரு வரைபடம் வெளியிட்டது.   இதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.  ஆயினும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் நேபாள நாட்டு அமைச்சரவை அந்த அரசியல் வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று நேபாள பிரதமர் கே பி சர்மா ஒலி, “இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக வருபவர்களால் நேபாளத்தில் கொரோனா அதிகரித்துள்ளது.  உள்ளூர் பிரமுகர்களும் சில அரசியல் கட்சி தலைவர்களும் தான் இதற்குப் பொறுப்பு ஆகும்.    சீனா மற்றும் இத்தாலி வழியாகப் பரவும் வைரஸை விட இந்தியாவின் வழியாகப் பரவும் வைர்ஸ்  மிகவும் ஆபத்தானது.  நேபாளத்தில் இந்திய வைரசால் பலர் பாடப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.