“முகக் கவசம் அணிவதினால், நாம் சுவாசிக்கும்போது வெளியேற்றப்படும் வைரஸ்கள் தப்பிக்க வழியின்றி, நமது சுவாசப் பாதியிலேயே தங்கிவிடுகின்றன. மேலும், ஆல்ஃபேக்டரி நரம்புகளின் வழியே சென்று, மூளையை அடைகின்றன – ரஸ்ஸல் பிளேலாக், எம்.டி., நரம்பியல் நிபுணர்
தற்போது பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு, முகக்கவசப் பயன்பாடு தலைவலி உருவாக்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே தலைவலி பிரச்சனை இருந்தவர்களுக்கு, வலி அதிகமாகி, 60% பேருக்கு வலிநிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. தலைவலியின் காரணத்தைப் பொறுத்தவரை, முகக்கவச பட்டைகள் உண்டாக்கும் வலி மற்றும் முகக்கவசம் ஏற்படுத்தும் அழுத்தம் எனக் கூறப்படுகிறது. முக்கியமாக, முகக்கவச பயன்பாடு, ஹைபாக்ஸியா – Hypoxia (இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைதல் ) மற்றும் / அல்லது hypercapnia  -ஹைபர்காப்னியாவை (இரத்தத்தில் கார்பன் –டை – ஆக்சைடு அளவு அதிகரித்தல்) உருவாக்குகிறது என்பதுவும் முக்கிய காரணம் ஆகும்.

N95 முகக்கவசத்தை நீண்ட நேரம் உபயோகப்படுத்தினால், அது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை 20% வரை குறைக்கும். ஒரு மனிதனை சுயநினைவை இழக்க வைக்க இது போதுமானதாகும். சமீபத்தில், N95 முகமூடியை அணிந்து தனது காரில்சென்ற ஒருவர் சுயநினைவை இழந்ததால், அவர் விபத்தில் சிக்கியதும், வயதான நபர்கள் அல்லது நுரையீரல் செயல்பாட்டு குறைபாடு உள்ளவர்களும், சுயநினைவை இழந்ததால் அடிபட்டு வந்தவர்கள் என பலர் இந்த மருத்துவ மனைக்கு வந்துள்ளனர். இது மரணத்திற்கும் வழிவகுக்கலாம்.
21 முதல் 35 வயதுடைய 159 சுகாதாரப் பணியாளர்களிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 81% பேர்களுக்கு முகக்கவசம் அணிந்ததால் தலைவலி பிரச்சனையை உணர்ந்துள்ளனர். ஏற்கனவே தலைவலி இருந்தவர்கள் அது அதிகமானதை உணர்ந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பலவீனமான வயதானவர்களுக்கும், சிஓபிடி, எம்பிஸிமா அல்லது நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் – COPD, emphysema or pulmonary fibrosis போன்ற நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கும் முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகளை இதுவரை யாரும் விளக்கவில்லை. நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை செய்தவர்கள், குறிப்பாக பகுதி அளவு நுரையீரல் நீக்கம் செய்துக் கொனடவர்களுக்கும் இதைப்பற்றி விளக்குவது மிகவும் முக்கியமாகும்.
அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் மற்றும் கொரோனா வைரஸ்
இந்த கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் என்னவெனில், இரத்த ஆக்ஸிஜன் அளவு குறைபாடு என்பது நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாட்டுடன் நேரடியாகத் தொடர்புடையது. சிடி 4+ எனப்படும் டி-லிம்போசைட் CD 4+ எனப்படும் T- lymphocyte என்பவை வைரஸ்களை எதிர்த்து போராடும் ஒருவகை முக்கிய நோயெதிர்ப்பு செல்கள் ஆகும். இந்த செல்களின் உருவாக்கம் இந்த ஆக்சிஜன் குறைவால் தடுக்கப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும் போது,  ஹைஃபாக்ஸியாவினால் தூண்டப்பட்ட காரணி -1 (HIF-1) எனப்படும் hypoxia inducible factor-1 (HIF-1) வேதிப்பொருளின் அளவு அதிகரித்து, CD4 உருவாக்கத்தைத் தடுக்க கூடிய T-Reg என்ற மற்றொரு வகை செல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது. இது COVID-19 உட்பட எந்தவொரு தொற்றுநோயையும் அதிகரிக்க செய்து, மோசமாக்கும். சுருக்கமாகக் கூறினால், முகக்கவச உபயோகம் நம்மை தீவிர தொற்று நோயில் ஆழ்த்தக் கூடும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக புற்றுநோய் பரவியிருக்கும் நிலையில் இருப்பவர்கள், இரத்தத்தில் ஆக்சிஜன் குறையும் பொழுது அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள். ஏனெனில், புற்று நோய் செல்கள் ஆக்சிஜன் குறைவான சூழலில், நன்றாக வளரும். அதாவது, குறைவான ஆக்சிஜன் புற்று நோய் செல்களில் வளர்ச்சி, உறுப்புகளுக்குள் ஊடுருவி வளர்தல் மற்றும் பரவுதலை ஊக்குவிக்கும். நீடித்த ஹைபாக்ஸியா – Hypoxia, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கும்.
முகக்கவசத்தின் தினசரி உபயோகம், மேலும் பல பிரச்சனைகளுக்கு காரணமாகலாம். வைரசினால் ஏற்படும் சுவாசக் கோளாறு இருப்பவர்கள், முகக்கவசத்தினை தினசரி உபயோகித்தால் குறிப்பாக N95 போன்ற இறுக்கமான முகக்கவசங்களை உபயோகிப்பதால், ஒவ்வொரு முறை சுவாசத்தின் போதும் வெளியேறும் குறிப்பிட்ட அளவு வைரஸ்கள் வெளியேற முடியாமல், சுவாசப்பாதையிலேயே தங்கிவிடும். நாளடைவில் வைரஸ்களின் எண்ணிக்கை அதிகமாகி, நுரையீரல் முழுவதும் வைரஸ்கள் நிரம்பி விடலாம். மேலும், நமது உடலில் வைரஸ்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அதிர்ச்சிக்கு உள்ளாகி ஸ்தம்பித்தது விடலாம். மேலும்,  சைட்டோகைன் என்ற உடனடி வைரஸ் எதிர்ப்பு புரதங்கள் உருவாகி, எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம்.  பெரும்பாலான சமயங்களில் இது உயிர் அபாயத்திற்கு வழிவகுக்கும். கொரோனா பாதிக்கப்பட்டவர் முகக்கவசம் அணியும் போது இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு இன்னும் தீவிர பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
மேற்கொண்டு நாம் அறியும் தகவல்கள் இன்னும் அச்சமூட்டுவதாக உள்ளன. நமது சுவாசப்பாதையில் தேங்கும் வைரஸ்கள் மூக்கில் இருந்து மூளைக்கு நேரடியாக செல்லும் ஆல்ஃபாக்டரி நரம்பு வழியாக மூளையை அடையும் சாத்தியக்கூறுகளும் முன்வைக்கப்படுகிறது. இந்த நரம்பு மூளையை அடையும் இடமானது நமது நினைவகம் ஆகும். இதனால் நமது நினைவுத்திறன் பாதிக்கப்படக் கூடிய அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த முறை முகக்கவசம் அணியும் பொது, அதை அணியும் முறையை பற்றிய மருத்துவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் ஆகும்.
English: Dr. Russell Blaylock, Neurosurgeon
தமிழில்: லயா