இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட நேபாளம்..! எல்லையில் எழுந்த சர்ச்சை

Must read

காத்மாண்டு: இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தமது நாட்டுக்கு சொந்தம் என்று குறிப்பிட்டு நேபாளம்  வெளியிட்டு உள்ள வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேபாள அரசாங்கமானது இன்று அந்நாட்டின் புதிய, சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைப்படத்தில் இந்திய பிராந்தியங்களான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை இணைத்துள்ளது
நில மேலாண்மை, கூட்டுறவு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. இம்மாத தொடக்கத்தில் நேபாள நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பேசிய பிரதமர் கே.பி. ஒளி, புதிய வரைபடங்கள் வெளியிடப்படும். அதில் தமக்கு சொந்தமாகக் கருதும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி இருக்கும் என்று கூறி இருந்தார்.
நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கூறியதாவது: லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலாபானி ஆகிய பகுதிகள்  நேபாளத்தின் பகுதிகள். இந்த பிரதேசங்களை மீட்பதற்கு உறுதியான ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நேபாளத்தின் அனைத்து பகுதிகளையும் இணைத்து அதன்படி நேபாளத்தின் அதிகாரப்பூர்வ வரைபடம் வெளியிடப்படும் என்றார்.
வடக்கு எல்லையில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைக்கும் சீனாவின் விஷமம் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது.  லிபுலேக்கில் இருந்து மானசரோவருக்கு 80 கிலோ மீட்டர் நீளத்தில் இந்தியா சாலை அமைத்த போதும்  நேபாளம் ஆட்சேபனை எழுப்பியது.
இந்த சர்ச்சை புதியதல்ல, 1816ம் ஆண்டு சுகோலி உடன்படிக்கையின் கீழ், நேபாள மன்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை பிரிட்டிசாரிடம் கலாபானி மற்றும் லிபுலேக் உள்ளிட்டவற்றை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article