ஆஸ்திரேலியா வெற்றியை இந்தியர்களுடன் சிட்னி ஓட்டலில் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியினர் –வீடியோ

Must read

சிட்னி:

 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை  வீழ்த்தி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியினர் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன்  சிட்னி ஓட்டலில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மகிச்சியை கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியினர், ஆஸ்திரே லியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை  முதல் முறையாக வென்று  வரலாற்று சாதனை படைத்துள்ளது.   சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்தமண்ணில் ஆஸ்திரேலியா பாலோ ஆன் ஆனது.

இந்திய அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்திய அணியினர் தங்களது வெற்றி சிட்னியில் உள்ள பிரபல ஓட்டலில் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள்டன்  ஆட்டம் பாட்டத்துடன் ஆடிப்பாடி  கொண்டாடினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நமது அணியினரின் ஆனந்த தாண்டவம் – வீடியோ…

 

More articles

Latest article