ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: பாக்.பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து

Must read

இஸ்லாமாபாத்:

ஸ்திரேலியா மண்ணில்  இந்திய அணி பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஏற்கனவே இந்திய குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்பட ஏராளமானோர் கோலி தலைமை யிலான இந்திய கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், தற்போது பாக்.பிரதமர் இம்ரான்கானும்  வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியினர், அங்கு டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியினர் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளனர். 72 வருடத்தில் முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக கோலி தலைமையிலான அணியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,  ஆஸ்திரேலியா வில் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளோம். கடுமையாக உழைத்து, மகிழ்ச்சியான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்தத் தொடர் மறக்க முடியாது ஆட்டம் மற்றும் அணி ஒற்றுமையின் வெளிப்பாடு. இனி வரும் போட்டிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்

அதுபோல முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், கபில்தேவ், கங்குலி உள்பட ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

அதுபோல இந்திய அணியின் வெற்றிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான்கான் இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில்  முதல் வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article