உக்ரைனில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய தூதரகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கடந்த ஒரு வாரத்தில் வெளியான மூன்றாவது அறிவிப்பாகும்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்த தகவலுக்காக காத்திருக்காமல் உடனடியாக மாணவர்கள் வெளியேற வேண்டும். பல்கலைக்கழங்கங்களுடன் தூதரக அதிகாரிகள் கலந்தாலோசித்து மாணவர்களின் படிப்பு தொடர தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
ADVISORY TO INDIAN STUDENTS IN UKRAINE.@MEAIndia @PIB_India @IndianDiplomacy @DDNewslive @PTI_News @IndiainUkraine pic.twitter.com/7pzFndaJpl
— India in Ukraine (@IndiainUkraine) February 22, 2022
இதனால், கல்வி நிலையங்களில் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்காமல் உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனம் இந்த வாரம் மூன்று சிறப்பு விமானங்களை இயக்குகிறது. முதல் விமானம் இன்று காலை 7:35 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கிவ் சென்றுள்ளது.