சென்னை: சென்னை மாநகராட்சியின் 136 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் இளவரசி வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட பல வார்டுகளில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி 136 ஆவது வார்டில் போட்டியிட்ட இளம் பட்டதாரியான திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் (வயது 22) வெற்றி பெற்றார்  இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட  நிலவரசி துரைராஜ் 2110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளருக்கு  1137 வாக்குகள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து,  விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த அறிவுச் செல்வி 5112 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 930 வாக்குகள் பெற்று  4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 546 வாக்குகள் பெற்றுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதன்படி, 1, 8 , 29, 49, 59, 94, 115, 121,  136, 168, 174, 187 ஆகிய வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.