டெல்லி: நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கேட்டரிங் சர்விஸ் மீண்டும் தொடங்கப்படுவதாக ஐஆர்சிடிசி அறிவித்து உள்ளது. அதன்படி, பிப்ரவரி 14ம் தேதி முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக  நாடு முழுவதும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு ரயில்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், எந்த ரயிலிலும் உணவு சேவைகள் வழங்கப்படவில்லை.

தொற்று குறையத் தொடங்கியதும் மீண்டும் பல ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது அனைத்து வகையான ரயில்களும் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் பிரீமியம் ரயில்களான ராஜதானி, சதாப்தி,தூரந்தோ ஆகிய ரயில்கள் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி.. வரும் 14ந்தேதி முதல் ஏற்கனவே கேட்டரிங் செயல்பட்ட அனைத்து ரயில்களிலும் மீண்டும் கேட்டரிங் சேவை இயங்கும் என்றும்,   கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு உணவுகள் வழங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் கூறியுள்ளது.