டில்லி:

இந்தியாவில் உள்ள 5 ரெயில் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த ரெயில்நிலைய மேலாண்மை என்ற வெள்ளோட்ட திட்டத்தின் படி புனே, பெங்களூரு, செக ந்திரபாத், ஆனந்விகார் (டில்லி), சண்டிகர் ஆகிய 5 ரெயில் நிலையங்களின் பராமரிப்பை 15 ஆண்டுகளு க்கு தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டள்ளது.

இதோடு ஏற்கனவே தனியார் பராமரிப்பில் உள்ள போபால் ஹபிப்ங்கஞ் ரெயில் நிலையத்தையும் சேர்த்தால் இதன் எண்ணிக்கை ஆறாக உயரும்.

இயக்குதல் மற்றம் பராமரிப்பு என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் பெறப்படவுள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனம் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை, ரெயில் நிலைய கடைகள் நடத்துதல், ரெயில் போக்குவரத்து அறிவிப்பு பலகை, விளம்பரம், வாகன நிறுத்துமிடம் ஆகிய பணிகளை கவனித்து கொள்ள வேண்டும். சிக்னல் மற்றும் ரெயில் போக்குவரத்தை ரெயில்வே நிர்வாகம் தன் வசம் வைத்துக் கொள்ளும்.

ஏலம் விடும் பணிகளை இந்திய ரெயில்வே நிலைய மேம்பாட்டு கழகம் (ஐஆர்எஸ்டிசி) மேற்கொள்ளும். முதலில் ரெயில்நிலையங்கள் இந்த கழகத்திடம் ஒப்படைத்த பின்னர் ஏல நடைமுகளை இது மேற்கொள்ளும். 5 ரெயில்நிலையங்களின் வருவாயை பகிர்ந்து கொள்ளும் முறை குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும் மொத்த இயக்குதல் லாபத்தின் அடிப்படையில் இது இருக்கும் என்று கூறப்ப டுகிறது. இதே நடைமுறை தான் ஓட்டல் தொழிலில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக 600 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். மக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் 130 ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க ஐஆர்எஸ்டிசி கடந்த ஆண்டு முதல் திட்டமிட்டுள்ளது. இதில் முதலீடு செய்ய யாருக்கும் ஆர்வம் இல்லாதது கடந்த வாரம் தெரியவந்துது. இதையடுத்து 68 ரெயில்நிலையங்கள் சொந்த வளங்கள் மூலம் பராமரிக்கப்படும் என்று ரெயில்வே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.