டில்லி:

ரெயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.50 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வேயில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் 90 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த மாதம் எஞ்சின் டிரைவர்கள், தொழில்நுட்பத் துறையினர், தண்டவாள சோதனைக் குழு உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டது

இந்த பணியிடங்களுக்கு இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.