டில்லி

வீடியோகோன்  உரிமையாளர்   தனது நிறுவனத்தை  ஐசிஐசிஐ வங்கி மேலாளரின் கணவருக்கு விற்றதில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்த புகாரில் சிபிஐ முன்விசாரணையை தொடங்கி உள்ளது.

வீடியோகோன் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பித் தராததால் அந்த நிறுவனத்தின் கடன் வாராக்கடனுக்கு மாற்றப்பட்டது.   அந்தக் கடன் வழங்குவதற்காக ஐசிஐசிஐ வங்கியின் மேலாண்மை இயக்குனர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு விடியோகோன் நிறுவன அதிபர் வேணுகோபால் கோச்சா தனது நிறுவனங்களில் ஒன்றை மாற்றி தந்ததாக செய்திகள் வெளியாகின.

நமது பத்திரிகை .காம் இந்த செந்தியை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

வீடியோகோன் வங்கிக் கடனும் வங்கி மேலாளரின் கணவர் நிறுவனமும் : புதிய தகவல்கள்

விடியோகோன் அதிபர் வேணுகோபாலும் தீபக் கோசாரும் இணைந்து ஒரு நிறுவனத்தை துவக்கி உள்ளனர்.  நூ பவர் ரினூபள்ஸ் என பெயரிடப்பட்ட அந்த நிறுவனத்தில் ரூ. வேணுகோபால் ரு. 64 கோடி முதலீடு அளித்துள்ளார்.  அந்த நிறுவனம்  தொடங்கி ஆறு மாதம் சென்ற  பின் வீடியோகோன் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் அளித்துள்ளது.

கடனைப் பெற்றுக் கொண்ட வீடியோகோன் அதிபர் வேணுகோபால் தூத் ரூ. 9 லட்சம் விலைக்கு தன்னிடம் இருந்த பங்குகளை தீபக் கோச்சாருக்கு மாற்றி நிறுவனத்தை அவருக்கே அளித்து விட்டார்.    அந்த செய்திகளை ஐசிஐசிஐ வங்கி மறுத்து அறிக்கை வெளியிட்டது.  தற்போது சிபிஐ இந்த விவகாரத்தில் தனத் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்த முன் விசாரணை தொடக்க அறிக்கையில் பெயர் தெரியாத  வங்கி அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.   ஆனால் வீடியோகோன் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது சரிவரத் தெரியவில்லை.   தீபக் கோச்சாரின் மனைவியும் வங்கி மேலாண்மை இயக்குனருமான சந்தா கோச்சார் வீடியோ கோன் நிறுவனக் கடனை உறுதி செய்யும் குழுவின் தலைவராக இருந்தவர் என வங்கியின் உயர் அதிகாரிகளில் ஒருவர் கூறி உள்ளது குறிப்பிடத்தக்