ந்தூர்

த்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஒரு 3 அடுக்கு கட்டிசம் இடிந்து விழுந்து 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் உள்ளது சர்வேட் பேருந்து நிலையம்.   இந்த பேருந்து நிலையம் அருகே ஒரு 3 அடுக்கு கட்டிடம் அமைந்துள்ளது.  இந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த எம். எஸ்.  ஹோட்டல் உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதியை அமைத்துள்ளது.

நேற்று இரவு சுமார் 10 மணிக்கு இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.    இதில் 8 பேர் மரணம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.   பலர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்துனர்.   காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக மீட்புப் பணியினர் தெரிவித்துள்ளனர்.   கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்ல்லை.