டில்லி:

நாடு முழுவதும் உள்ள ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகளில் 34 சதவிகித ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் 23 ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இதில், பெரும்பாலான கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் ஊழியர்கள்  நியமிக்கப்படாமல் இருப்பது தெரிய வந்ததுள்ளது. அதிகாரிகளின் ஆய்வில் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெரும்பலானா ஐ.ஐ.டி.க்களில்  34% ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன; மும்பை மற்றும் டெல்லியில் முறையே 27% ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், சென்னை உள்பட மற்ற ஐஐடிகளில் 29 சதவிகித அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை, காரக்பூர் மற்றும் கான்பூர்  ஐஐடிகளில் 25% முதல் 45% வரை ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பது ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

ஆனால் இமாச்சலபிரதேசத்தில் உள்ள ஐ.ஐ.டி.-மண்டியில், அனுமதிக்கப்பட்டுள்ளதை விட  அதிக அளவிலான ஊழியர்கள் இருப்பதாகவும், 4 பேராசிரியர்கள் அங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சத்தீஸ்கரில் செயல்பட்டு வரும் ஐஐடியில் மட்டும்  58% அளவில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் இது நாட்டில் உள்ள ஐஐடிகளிலேயே மிக மோசமான இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கார்க்பூரில் 46 சதவீதமும், டெல்லியில் 29 சதவீதமும், சென்னை 28 சதவீதமும், மும்பையில் 27 சதவீதமும் ஊழியர்களின் இடங்கள் காலியாக  உள்ளன.

அதுபோல புதிதாக தொடங்கப்பட்ட தார்வாட் ஐஐடியிலும் 47 சதவிகித ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களாக கூறப்படும் ஐஐடியில் இவ்வளவு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருவது  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.