டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளராக அசோக்கெலாட்டை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றதில் இருந்த கட்சியின் நிர்வாகிகளின் நியமனங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறார். பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் மாற்றப்பட்டுள்ளார்.

இதுவரை  காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருந்து வந்த ஜனார்த்தன் திரிவேதி மாற்றப்பபட்டு அவருக்கு பதிலாக ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக்கெலாட்டை கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமனம் செய்துள்ளார்.

அசோக் கெலாட் ஏற்கனவே கட்சியின் கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரத்தையும், கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கே வழங்க வேண்டும் என  வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.