இந்திய ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ரயில் பெட்டிகளின் வடிவமைப்பை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ள ரயில்வே நிர்வாகம். ஏ.சி. 3 டயர் டூரிஸ்ட் கிளாஸ் எனும் புதிய பெட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

படுக்கை வசதியுடன் கூடிய பொது வகுப்பிற்கும், 3 அடுக்கு குளிர்சாதன வகுப்பிற்கும் இடைப்பட்ட வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெட்டிகளில் 105 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும் இது குறைந்த கட்டண ஏ.சி. ரயிலாக இருக்கும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

https://twitter.com/Vaidyvoice/status/1336195343927529473

பக்கவாட்டு கீழ் இருக்கையை மடித்து படுக்கும் பயணிகள், இரு சீட்டுகளும் இணையும் இடத்தில் உள்ள இடைவெளியால் ஏற்படும் தொய்வை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ரயில் பெட்டியின் வீடியோ பதிவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் பக்கவாட்டு கீழ் இருக்கையில் பயணம் செய்பவர்களுக்காக கூடுதல் பலகை ஒன்று தரப்பட்டுள்ளது, இதனால் மற்ற படுக்கை போன்று இதுவும் சீரான அமைப்புடன் இருக்கும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது.