கோடை விடுமுறையையொட்டி 358 சிறப்பு ரயில்கள் இயக்கம்! இந்தியன் ரயில்வே

Must read

டெல்லி: கோடை விடுமுறையையொட்டி 358  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறை இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை விடுமுறையின்போது பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், வாரம் இருமுறை இயங்கும் வகையில் 350 சிறப்பு ரயில்களை இயக்குகிறது.  இந்த சிறப்பு ரயில்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 4.4.2022 முதல் திறக்கப்பட்டுள்ளது மற்றும் பிற டிஎன் ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே திறக்கப்பட்டு உள்ளது. ரயில்களின் விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

More articles

Latest article