வுஹான்:

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

இப்போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டி ஒன்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை ஹீ பிஞ்ஜியாவை எதிர்த்து ஆடினார். 1 மணி 17 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 15:21, 21:14, 22:24 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார்.